
நெல்லை மாவட்டம் ஆனைக்குடி பகுதியில் முத்து என்ற 39 வயது நபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அதோடு இது பற்றி வெளியே சொல்ல கூடாது என கூறி சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வள்ளியூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்ததால் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அதன்படி முத்துவுக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் 15,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாத இரண்டரை வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறையினரை நீதிபதிகள் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.