
நகைச்சுவை திறமையை கொண்டு விஜய் டிவியில் நிறைய ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் அமுதவாணன். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் மற்றும் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்து கொண்ட இவர் தனக்கென ஒரு தனி பெயரை பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தால் அமுதவாணன் கொடுத்த பழைய பேட்டி ஒன்றில் தனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது எனவும் ஆனால் அந்த நேரத்தில் வேறொரு நிகழ்ச்சியில் மாட்டிக்கொண்டதால் நிறைய பட வாய்ப்புகளை தவற விட்டு விட்டேன் எனவும் பேசி இருந்தார். தற்போதும் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் அமுதவாணன் புதிய கார் ஒன்றை தற்போது வாங்கியுள்ளார். அது குடும்பத்துடன் சென்று அவர் புதிய காரை வாங்கி உள்ள நிலையில் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.