சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு வருடமும் சிறந்த T20, டெஸ்ட், ஒரு நாள் அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து அங்கீகரிப்பது வழக்கம். அவ்வகையில் 2024 ஆம் வருடத்திற்கான சிறந்த நடுவருக்கான விருதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

அதன்படி இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் இல்லிங்வொர்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2022 மற்றும் 2023 வருடங்களிலும் சிறந்த நடுவருக்கான விருதை ரிச்சர்ட் தான் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.