
அமெரிக்காவின் சான் டியாகோ மாவட்டத்தில், பள்ளி மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் முன்னாள் ஆசிரியர் ஜாக்குலின் மா (36) மீது கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022–2023ஆம் ஆண்டிற்கான “ஆண்டின் சிறந்த ஆசிரியர்” விருதைப் பெற்ற மா, இரண்டு சிறுவர்களிடம் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை நாளைக்கு தீர்ப்பு வழங்கியுள்ளது. இது பற்றி வழக்கறிஞர்கள் தெரிவித்ததாவது, அவர் 12 வயது சிறுவனுக்கு 10 மாதங்களுக்கும் மேலாக சீ, காதல் கடிதங்கள் மற்றும் பாலியல் தூண்டுதல்களுடன் கூடிய குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
மாணவனின் தாயார், தன் மகனின் நிலை அறிந்து அதிகாரிகளைத் தொடர்புகொண்டதிலிருந்தே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குப் பின் கூடைப்பந்து பயிற்சிக்காக இருப்பதாக பெற்றோர் நம்பிய நிலையில், மா தனது வகுப்பறையில் அந்த சிறுவனை மூன்று மாதங்களுக்கும் மேலாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முந்தைய ஆண்டுகளில், 11 வயது சிறுவனையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி பரிசுகள், உணவு மற்றும் தனிப்பட்ட உதவிகளின் மூலம் அவர்களை வலைவீசியதாகவும் கூறப்படுகிறது.
பிப்ரவரி மாதம், ஒரு சிறுவன் மீது வலுக்கட்டாய பாலியல் வன்கொடுமை செய்ததற்கான இரண்டு குற்றச்சாட்டுகள், மேலும் ஒரு சிறுவன் மீது பாலியல் வன்கொடுமை செய்ததற்கான ஒரு குற்றச்சாட்டு, மற்றும் குழந்தை தொடர்பான ஆபாசப் பதிவுகள் வைத்திருந்தது தொடர்பான ஒரு குற்றச்சாட்டை மா நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். தண்டனை விதிக்கும் நேரத்தில் மா, “நான் என் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் தவறாகப் பயன்படுத்தி, அவர்கள் அப்பாவித்தனத்தை பறித்தேன். இது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தவறாகும்” என கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
NEW: ‘Teacher of the Year’ Jacqueline Ma sentenced to 30 years to life for s*xually abusing her elementary school students.
The 36 year old San Diego, California teacher was seen bawling in court when she realized she’d be spending the next 3 decades in prison.
Ma pleaded… pic.twitter.com/YwAGYT7Rsi
— Collin Rugg (@CollinRugg) May 11, 2025
சான் டியாகோ மாவட்ட வழக்கறிஞர் சம்மர் ஸ்டீபன் கூறுகையில், “இந்த ஆசிரியை, மாணவர்கள் மீதான நம்பிக்கையை மிகவும் வெறுக்கத்தக்க முறையில் மீறியுள்ளார். அவரது செயல்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் ஒரு நீங்காத வடுவாக இருக்கும். இந்த 30 ஆண்டு தண்டனை, அந்த மாணவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும், சமூகத்திற்கும் ஒரு வகையில் நீதியை வழங்கும்” எனக் கூறினார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஆசிரியை மா நீதிமன்ற வளாகத்தில் வைத்து கதற வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.