சிரியாவில் ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அந்த நாட்டின் அதிபர் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். நாட்டின் பெரும்பகுதியை அதிபருக்கு எதிராக கிளர்ச்சி செய்து வந்தவர்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் காரணமாக 50 ஆண்டுகால ஆசாத் குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. அதிபர் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு முக்கிய துறைகளின் அதிகாரிகள் பலரும் வெளியேறிய நிலையில் பிரதமர் முகமது காஜி ஜலாலி மட்டும் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார்.

இவர் நாட்டில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகவும் புதிய ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பதற்காகவும் கிளர்ச்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் நிலையில், தற்போது சிரியாவின் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது. அதாவது நிலநடுக்கம் ஏற்படக்கூடிய வெடிகுண்டை சிரியா மீது இஸ்ரேல் வவீசியுள்ளது. இதனால் அங்கு 3.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.