
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் தற்போது கார் ரேஸில் கலந்துகொண்டு வருகிறார். இவர துபாய் நடைபெற்ற 24H கார் ரேஸில் கலந்து கொண்ட நிலையில் அவருடைய அணி மூன்றாம் இடத்தை பிடித்தது. நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் இதில் விடா முயற்சி பிப்ரவரி 6-ம் தேதியும், குட் பேட் அக்லி ஏப்ரல் 10-ம் தேதியும் வெளியாகிறது. தற்போது ரேசில் கவனம் செலுத்தும் அஜித் இனி வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டும் தான் நடிப்பேன் எனவும் விளையாட்டில் சாதிக்க விரும்புவதால் அதில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகர் மாதவன் நடிகர் அஜித்தை சூப்பர் ஸ்டார் என்று புகழ்ந்துள்ளார். இது பற்றி சமீபத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மாதவன் கூறியதாவது, நடிகர் அஜித் ஒரு பந்தய வீரர் என்பதால் அவருக்கு பைக்குகள் பற்றி நன்றாக தெரியும். அவர் ஈடுபடும் அனைத்து விஷயங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார். அதன்பிறகு சினிமா வரலாற்றில் தன்னுடைய படங்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாத ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்றால் அது நடிகர் அஜித்குமார் மட்டும்தான். இது நம்ப முடியாதது தான். மேலும் இதுவரையில் அவருடைய படங்கள் அனைத்தும் அஜித் குமார் படங்கள் என்றுதான் கூறப்படுகிறது என்று கூறினார்.