
லக்னோவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025-ன் 61-வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஸ்பின்னர் திக்வேஷ் ராத்தி இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாரத் ரத்னா அட்டல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் 8-வது ஓவரில் நடந்த சம்பவம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அதிரடியாக விளையாடிய அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகன் விருது வென்ற நிலையில் அவர் மொத்தம் 20 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 4 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் அடங்கும். இந்நிலையில் 59 ரன்கள் எடுத்த அபிஷேக் ஷர்மா திக்னேஷ் ரதி வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது அவர் கோபமாக அபிஷேக் ஷர்மாவை பார்த்து கையை வீசி தன்னுடைய சிக்னேச்சர் கொண்டாட்டமான நோட்புக் செலிபரேஷனில் ஈடுபட்டார்.
இதனால் அபிஷேக் ஷர்மா மற்றும் திக்வேதி ரதியிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் நடுவர்கள் மற்றும் சகப் போட்டியாளர்கள் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தனர். இந்நிலையில் திக்வேதி ரதி செலிப்ரேஷன் என்ற பெயரில் மற்ற அணி வீரர்களை சீண்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனால் இவர் 5 demerit பெற்ற நிலையில் தற்போது குஜராத்துக்கு எதிரான போட்டியிலிருந்து அவரை ஐபிஎல் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அதோடு போட்டி கட்டணத்திலிருந்து அவருக்கு 50% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அபிஷேக் ஷர்மாவுக்கும் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்