தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் எஸ்.வி சேகர். இவர் பாஜக கட்சியின் நிர்வாகியாக இருந்த நிலையில் சமீபத்தில் அந்த கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் நடிகர் எஸ்வி சேகர் பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறாக பேசியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு மாத காலம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடிகர் எஸ்வி சேகர் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் ஒரு கருத்தை வெளியிடுவதற்கு முன்பாக யோசிக்க வேண்டாமா என்று கேட்டனர். அதற்கு எஸ்வி சேகர் தரப்பில் அந்த கருத்தை அப்படியே சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். ஆனால் பின்னர் அதனை உடனடியாக நீக்கிவிட்டேன் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. மேலும் இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் எஸ்‌வி சேகர் சரணடைவதற்கு 4 வாரங்கள் இடைக்கால= விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.