மராட்டிய அரசு சத்ரபதி சிவாஜி மகாராஜ் -சாய்பாய் தம்பதியருடைய மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி. மகாராஜாவினுடைய வாழ்க்கை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் சாவா. இந்த படத்தில் சத்ரபதி சாம்ராஜ் ரோலில் விக்கி கௌசலும், சாம்ராஜ்யின் மனைவி யேசுபாய் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளார்கள். இந்த படம் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியானது. இந்த நிலையில் இப்படத்தில் வரும் காட்சி ஒன்றை பார்த்துவிட்டு மத்திய பிரதேசத்தில் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் புதையலை தேடி கிளம்பி சம்பவம் ஒன்று நடந்தது.

அதாவது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் கிராமவாசிகள் தீப்பந்தங்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியோடு வயல்களை தோண்டுவதை பார்க்க முடிகிறது. பூமிக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்க நாணயங்களை கண்டுபிடிப்பது தான் அவர்களுடைய இலக்கு. முகலாயர் காலத்தில் முகலாய நாணயம் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்ததாகவும் நம்பப்படுகிறது. அதாவது புர்ஹானபூரில் உள்ள  கோட்டைக்கு அருகில் புதைக்கப்பட்ட தங்க நாணயங்களை பற்றி பேசும் ஒரு காட்சியானது இந்த படத்தில் உள்ளது.

இதை பார்த்த பிறகு கிராமவாசிகள் அங்கே உண்மையிலேயே ஒரு தங்க புதையல் புதைந்து இருக்கலாம் என்று நினைத்து தோண்ட தொடங்கியுள்ளார்கள். இதனையறிந்த காவல்துறை கோட்டை பக்கத்தில் அரசாங்க அனுமதி இல்லாமல் இதுபோன்று அகழ்வாராய்ச்சி செய்வது  சட்டவிரோதமானது என்று எச்சரித்து அனுப்பியுள்ளது.