இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிவகங்கை மாவட்டம் நடந்த ஒரு விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு முதியவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயற்சி செய்தார். அதே சமயம் அந்த வழியாக வேகமாக வந்த கார் முதியவர் மீது மோதியது. இதனால் சில அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட முதியவர் உருண்டு விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் முதியவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம்