
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் களம் காண்கிறார். நடிகர் விஜய் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் அவருடைய அரசியல் வருகை 2026 ஆம் ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எதிர்காலத்தில் எந்த நல்லது நடந்தாலும் அதனை நம்ம பசங்க தான் செய்திருப்பார்கள் என்று கூறுகிறார்.
இந்த வீடியோவை பார்த்த தமிழக வெற்றிக்கழகத்தின் ஆதரவாளர்களும் ரசிகர்களுமான இரண்டு பேர் சாலையில் கிடந்த ஒரு குழியை சிமெண்ட் பூசி அடைத்தனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அந்த குழியால் மிகவும் சிரமப்பட்ட நிலையில் வாலிபர்கள் இருவரும் களத்தில் இறங்கி அதனை சரி செய்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டுகளை பெற்றுள்ளது.
View this post on Instagram