திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்தே பாரத் ரயில் வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னைக்கு 1.50 மணிக்கு வந்தடையும். மறு மார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2 50 மணிக்கு புறப்படும். இந்த நிலையில் பயணிகளுக்கு கொடுக்கப்பட்ட சாம்பாரில் வண்டு இறந்து கிடந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் ஊழியர்களிடம் கேட்டனர். அப்போது அது ஊழியர்கள் அது சீரகம் என தெரிவித்தனர். பயணிகள் அது வண்டு தான் என நிரூபித்ததை அடுத்து ஊழியர்கள் பயணிகளை சமாதானம் செய்துள்ளனர். சாப்பாட்டில் வண்டு கிடந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.