ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை தற்போது ஐசிசி வெளியிட்டது. அதன்படி பிப்ரவரி 19ஆம் தேதி ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் நடைமுறை இருக்கும் நிலையில் இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்த நிலையில் பின்னர் ஐசிசி இந்தியா மோதும் போட்டிகளை வேறு இடத்தில் மாற்றி வைக்க முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில்  உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்களால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அந்த வகையில் தற்போது ‌ இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள்  பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி மீது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி ஏராளமான ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .