
விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா, அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது ஷமியின் பந்துவீச்சுக்கு எதிராக தங்கள் தந்திரங்களை பரிசோதிக்க, நெட் பயிற்சியில் கவனம் செலுத்தினார்கள். ஆனால் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எந்த இரக்கமுமின்றி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் இந்திய அணியின் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான முதல் பயிற்சி அமர்வில், பல பந்துகளை சிக்ஸர்களாக பறக்க விட்டனர்.
இந்த அதிரடி பேட்டிங்கில் ஹார்திக் பாண்ட்யா அடித்த பந்தானது ரிஷப் பண்ட் முழங்காலில் நேரடியாக பாய்ந்தது. உடனடியாக அணியின் பயிற்சியாளர் கம்லேஷ் ஜெயின் அவருக்கு மருத்துவ உதவியை வழங்கினார். இதனையடுத்து சிறிது நேரம் ஓய்வெடுத்த ரிஷப் பண்ட், மற்ற வீரர்கள் தங்கள் பேட்டிங் பயிற்சிகளை முடித்தபின் மீண்டும் கீல் அணிந்து களமிறங்கினார்.