
பொதுவாக ஒரு நிகழ்ச்சி என்றாலே அதில் விருந்துக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அதிலும் திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம். திருமண நிகழ்ச்சியில் தடபுடலாக விருந்து நடக்கும். அதே சமயத்தில் திருமண விருந்துகளால் வட மாநிலங்களில் பல்வேறு பிரச்சனைகள் நடந்து கல்யாணம் நின்ற சம்பவங்கள் கூட நடந்துள்ளது. சமீபத்தில் கூட உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால் மணமகள் வீட்டார் திருமணத்தை நிறுத்த உடனடியாக மணமகன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து அங்கு வைத்து பெண்ணை திருமணம் செய்தார். இந்த நிலையில் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சியின் போது நடந்த ஒரு பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது அங்குள்ள சகாவர் என்ற பகுதியில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மணமகனின் உறவினரான அருண்குமார் என்பவர் சென்றார். அவர் விருந்து சாப்பிட சென்ற நிலையில் சாப்பாடு பரிமாறப்பட்டபோது சாப்பாடு ருசியாக இல்லை என்று கூறினார். இது மணமகள் வீட்டினருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஒரு கட்டத்தில் மணமகள் மற்றும் மணமகன் வீட்டிற்கு இடையே கடும் பிரச்சனை ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த மணமகளின் மாமா துப்பாக்கியை எடுத்து அருண்குமாரை சுட்டு கொலை செய்துவிட்டார். இதைப் பார்த்து அங்கிருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். அதன் பிறகு விஜயகுமாரை சிலர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்