சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் விநாயகம் என்ற 72 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு தனலட்சுமி (60) என்ற மனைவி இருந்துள்ளார். இதில் விநாயகம் சம்பவ நாளில் இரவு தன்னுடைய மனைவியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அப்போது தனலட்சுமி தாமதமாக சாப்பாடு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த விநாயகம் கோபத்தில் தன்னுடைய மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

இந்நிலையில் வேலைக்கு சென்று இருந்த அவர்களுடைய மகன் வீட்டிற்கு வந்ததும் கண்ட காட்சியை பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்தார். அவர் உடனடியாக திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் தனலட்சுமியின்  சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் விநாயகத்தை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.