
சேலம் மாவட்டம் கோரிமேடு அருகேயுள்ள சரஸ்வதி நகர் பகுதியில் வசித்து வந்த 65 வயதான அன்னலட்சுமி என்ற மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னங்குறிச்சி பகுதியில் தங்கியிருக்கும் அவரது மகள் கலைச்செல்வி, தினசரி உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி தாயை கவனித்து வந்துள்ளார். வழக்கம்போல் இன்று காலை உணவு எடுத்து சென்ற கலைச்செல்வி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தனது தாயின் உடல் தீயில் கருகி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக தகவலறிந்த கன்னங்குறிச்சி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்னலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தற்கொலைதானா? அல்லது மின் கசிவு காரணமாக ஏற்பட்ட விபத்தா? என்பது குறித்த விசாரணை பல்வேறு கோணங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அன்னலட்சுமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மன உளைச்சலில் இருந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர்.