தமிழகத்தில் கல்வி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல்களை பொதுமக்கள் பாதுகாப்பாக பகிர்வதற்காக இ-பெட்டகம் என்ற கைபேசி செயலில் சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இணைய சேவை மையம் வழங்கும் சான்றிதழ்கள், கல்வி சான்றிதழ்கள்,மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் நில பரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் தரவுகளை பாதுகாக்க நம்பிக்கை இணையம் வழி செய்திடும்.சான்றிதழ்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்க அரசாங்கத்திற்கு இந்த நம்பிக்கை இணையம் உதவி செய்யும். இதனைப் போலவே பொது மக்களுக்கு உதவிடும் வகையில் இ பெட்டகம் கைபேசி செயலி தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக இணைய சேவை மையங்கள் வழங்கும் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் சேமித்து வைத்து பொதுமக்கள் பாதுகாப்பாக பகிரலாம். புதிய சேவையின் முதல் கட்டமாக ஜாதி சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ் உட்பட 24 வகையான சான்றிதழ்களை இ-பெட்டகம் கைபேசி செயலி பாதுகாக்கும். இந்த செயலி மூலமாக மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி அல்லது பிற வழிகளில் ஆவணங்களை பாதுகாப்பாக பகிர விருப்பமான வழியை குடிமக்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது