
சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் சம்பவம் இந்தியாவில் நடைபெற்று உள்ளது. அதாவது மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் 80 வயது பாட்டி ஒருவரும் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இந்தப் போட்டியில் குறித்த 80 வயது மூதாட்டி 51 நிமிடத்தில் 4.2 கிலோமீட்டர் தூரத்தை கடந்து ஓடி உள்ளார்.
இவர் இந்த போட்டியில் புடவை கட்டிக் கொண்டும் கால்கள் சப்பாத்துகளை மாட்டிக்கொண்டும் தான் மாரத்தான் ஓடியுள்ளார். அது தொடர்பான வீடியோவை அவரது பேத்தி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் இந்த பாட்டியின் அசாத்திய திறமைகளை கண்டு பலரும் வாழ்த்தி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த பாட்டி இதற்கு முன்பு ஐந்து முறை மாரத்தான் போட்டியில் பங்கேற்று உள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க