மத்திய அரசின் பட்ஜெட், உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் சென்னை சைதாப்பேட்டை பணிகள் மாளிகை அருகே நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கே.பாலகிருஷ்ணன், “தமிழ்நாடு என்ற வார்த்தை இல்லாத பட்ஜெட் இதுவரை இருந்தது இல்லை” என்று கூறினார். பாஜக ஆட்சியில் சாதாரண மக்களின் மீதான வரியை அறுபது சதவீதமாக ஏற்றி கார்ப்பரேட் வரியை 35 சதவீதமாக குறைத்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 100 நாள் திட்டம் கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை தூக்கி நிறுத்தியதாகவும் 38 லட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு இல்லை எனவும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.