
பீகார் மாநிலம், வைசாலி மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அவரது வீட்டில் வேலை செய்த வேலைக்காரன் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.
வழக்கம் போல வேலைக்கு வந்த வேலைக்காரன் வீட்டின் சமையல் அறையில் வேலை செய்து கொண்டுயிருந்தான் பின்னர் சாதாரணமாக பேச்சு கொடுக்க தொடங்கிய வேலைக்காரன் எஜமானியிடம் பணம் கேட்டுள்ளான், வீட்டின் லாக்கரில் வேலைக்காரன் மோனு கேட்ட 20,000 ரூபாய் பணம் இருந்ததது அவன் தெரிந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது .
எஜமானி அழகு குமாரி பணத்தை கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்தான், மேலும் அந்த பிரச்சனையை தொடர்ந்து அழகு குமாரி காய்கறிகளை வெட்டச் சொன்னதால் இந்த தகராறு முற்றியது ,காய்கறி வெட்டுவதாக கூறி கத்தி எடுத்து சரமாரியாக 25 முறை கண்முடித்தனமாக குத்தினார்.
கொலை செய்த பின்னர் வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார் வேலைக்காரன். கணவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவி உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து குற்றவாளியை கைது செய்தனர்.
விரைந்து செயல்பட்ட போலீசார் வேலைக்காரனை கைது செய்தனர் தனது குற்ற செயலை ஒப்புக்கொண்டுள்ளான். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.