ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிய நிலையில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் எம்.எஸ் தோனி குறித்து தற்போது அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் தோல்வியின் விளிம்பில் அணி இருக்கையில் தோனியை பார்த்தவுடன் இதுதான் கடைசி போட்டி என்று வருந்தினேன். ஆனால் விக்கெட் ஆவதற்கு முன்பாக ஒரு சிக்ஸர் வெளியே அடித்ததை பார்த்தவுடன் அவருக்கு ஓய்வு கிடையாது என்பதை ஒப்புக்கொண்டேன். சாம்ராஜ்யங்கள் சரியலாம். சாகா வரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை. நன்றி தோனி என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஜெயக்குமாரின் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.