இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து சவுதி அரேபியா புறப்பட்டுள்ளார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கம், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திப்பதும், இருநாடுகள் இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் ஒப்பந்தங்களை முன்வைப்பதும் ஆகும். இதன் முக்கிய அம்சங்களில் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் கூட்டாய்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சில மணி நேரங்களுக்கு முன் பிரதமர் மோடி பயணித்த விமானம் சவுதி அரேபியா எல்லைக்குள் நுழைந்ததும், அவருக்கு சிறப்பு மரியாதையாக சவுதி அரசு F-15 ரக போர் விமானங்களை பாதுகாப்பு வலையாக அமைத்தது. இந்த உணர்வுபூர்வமான வரவேற்பை இந்திய வெளியுறவு துறை வெளியிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இது, பிரதமருக்கு சவுதி அரசு அளித்த மரியாதையையும், இருநாட்டு உறவுகளின் வலிமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.