
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த காரும் லாரும் நேருக்கு நேர் மோதி விபத்து கொள்ளானது. இதில் காரில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். லேசான காயங்களுடன் லாரி ஓட்டுநர் உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.