
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி தாமதமாக வந்த நிலையில் லேட்டானதற்கு அங்கிருந்தவர்களிடம் மன்னிப்பு கூறினார். பின்னர் தான் தாமதமாக வந்ததற்கான காரணத்தையும் அவர் கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது, நான் இங்கு வந்ததும் மாநிலத்தில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற இருப்பது தெரியவந்தது.
அந்த தேர்வுக்கு மாணவர்கள் செல்ல இருந்த நேரமும் நான் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வரவேண்டிய நேரமும் ஒன்றாக இருந்தது. அந்த சமயத்தில் நான் வெளியே வந்தால் போக்குவரத்தில் மாற்றம் ஏற்படும். இதனால் மாணவர்கள் தேர்வுக்கு செல்வதற்கும் தாமதம் ஏற்படும். இதனால்தான் ஆளுநர் மாளிகையில் இருந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்பட முடிவு செய்து கிளம்பினேன்.மேலும் நான் தாமதமாக வந்ததற்காக இங்கிருந்து அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.