இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா. இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கடந்த‌ டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்ற நிலையில் அதன் பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்படி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஜடேஜா டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாடுவதாக கூறினார்.

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் போட்டியில் ஜடேஜா சரியான முறையில் விளையாடவில்லை. இந்நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஜடேஜா ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தன்னுடைய வலைதள பக்கத்தில் டெஸ்ட் போட்டியின் ஜெர்சியை நம்பர் உடன் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் இதன் காரணமாக அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.