சசிகுமார் சிம்ரன் நடிப்பில் ரிலீசான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குனரான அபிஷன் டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் பலர் படக்குழுவை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத் திரைப்படத்தை பார்த்து விட்டு இயக்குனர் அபிஷனை பாராட்டியுள்ளார்.

அவர் இயக்குனரை  சர்ப்ரைஸாக செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் பார்த்த சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று எனக் கூறியுள்ளார். நடிகர்களின் நடிப்பையும், இசையையும், இயக்கத்தையும், திரையரங்கில் கண்டு ரசித்ததாக அனிருத் கூறியதாக இயக்குனர் அபிஷன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.