தமிழகத்தில் நான் தான் அன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் அன்னபூரணி. இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிபராசக்தி தொண்டு நிறுவனம் நடத்தி வந்த நிலையில் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ பென்னத்தூர் அருகே உள்ள ராஜா தோப்பு என்ற பகுதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வருவதோடு பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்கி ஆசீர்வாதம் வழங்குகிறார். அதோடு பக்தர்கள் மத்தியில் அவ்வப்போது சொற்பொழிவுகளையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது தன்னுடைய முகநூல் பக்கத்தில் அன்னபூரணி தான் மூன்றாவது திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்ததோடு மாப்பிள்ளையின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இவருக்கு முதல் திருமணம் நடந்த நிலையில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் தன் கணவர் மற்றும் குழந்தையை பிரிந்த அவர் இரண்டாவது ஆக அரசு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடைய காதல் கணவர் அரசு இறந்துவிட்டார். அவர் இறந்த பிறகு தான் அன்னபூரணி தொண்டு நிறுவனத்தை அவர் தொடங்கினார். இந்நிலையில் தற்போது மூன்றாவதாக ரோகித் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அரசுவே தான் திருமணம் செய்த அதே நவம்பர் 28ஆம் தேதி தான் ரோகித்தையும் திருமணம் செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளார். மேலும் என்னுடைய ஆன்மீகத்திற்காக தன்னை அர்ப்பணித்த ரோகித் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்துகொண்டு ஆசீர்வாதம் ஆகி செல்லுமாறும் கூறியுள்ளார்.