
கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு தவறாக இருப்பதாக அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறது. வழக்கமாக Non Judicial முத்திரைத் தாளில்தான் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், அண்ணாமலை நீதி மன்றத்தில் தாக்கல் செய்யக் கூடிய India Court Fee முத்திரைத் தாளில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருக்கிறார். இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லவிருப்பதாகவும் அதிமுக தெரிவித்துள்ளது.