
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் சங்கீதா. இவர் பின்னணி பாடகரான க்ரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நடிகை சங்கீதா சோ ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதில் அவர் எனக்கு தமிழை விட தெலுங்கு தான் ரொம்ப பிடிக்கும் எனவும் தமிழை விட தெலுங்கில் நல்ல மரியாதை கிடைக்கிறதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் தமிழ் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை உண்மையை கூறி தான் ஆகவேண்டும் என அவர் கூறியுள்ளார். அதன்பின் அவர் நான் தமிழில் யாரிடமும் வாய்ப்பு கேட்பதில்லை ஆனால் சிலர் எனக்கு கால் செய்து உங்களுக்கு இவ்வளவு சம்பளம் தருகிறோம் நீங்கள் இதை நடித்துக் கொடுத்து விடுங்கள் எனக் கூறுகின்றனர்.
நான் என்னவோ கஷ்டப்படுவது போல் அவர்கள் நினைத்து பேசுகிறார்கள் இதெல்லாம் எனக்கு பிடிக்காது. எனக்கு தமிழில் சரியாக மரியாதை கிடைப்பதில்லை இதனால் நான் வருத்தப்பட போவதில்லை எனக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கிறது இதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன் எனவும் இதனால் எனக்கு தெலுங்கு தான் ரொம்ப பிடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.