தமிழகத்தில் பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் நடப்பு ஆண்டு சம்பா ராவி பருவம் பயிர்களுக்கு காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு நிறுவனமாக என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் காப்பீடு செய்ய ஒரு ஏக்கர் சம்பா மற்றும் நவரை நெற்‌ பயிருக்கு 492.75 ரூபாய்‌, வேர்க்கடலைக்கு 432 ரூபாய், உளுந்துக்கு 270.75 ரூபாய், எள்ளுக்கு 157.5 ரூபாய், வாழைக்கு 2.055 ரூபாய், கரும்புக்கு 2,750 ரூபாய், மரவள்ளிக்கு 1517.25 ரூபாய், மிளகாய்க்கு 1,102 ரூபாய்,  கத்தரிக்கு 817.50 ரூபாய்‌ கட்டணமாக செலுத்த வேண்டும்‌.

மேலும் பொது சேவை மையங்கள்‌, தொடக்க வேளாண்மைக்‌ கூட்டுறவு சங்கங்கள்‌ மற்றும்‌ தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்‌ மூலமாக காப்பீடு தொகை செலுத்தி  பதிவு செய்ய வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.