தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் அயலான். தற்போது அமரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து ஏ,ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உள்ள ஒரு படத்தில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ருதிஹாசன் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் ரெமோ படத்தில் முதலில் கமிட் ஆகியது ஸ்ருதிஹாசன் தானாம். ஷூட்டிங்க்கு ரெடியான சமயத்தில் திடீரென்று சிவகார்த்திகேயன் எல்லாம் சின்ன ஹீரோ அவரோடு எப்படி நான் நடிப்பேன் என்று கூறி பின்வாங்கி விட்டாராம் .மேலும் ஒரு முறை கமலஹாசன் பற்றி சிவகார்த்திகேயன் தவறாக பேசியதால், அந்த சமயத்தில் சம்பளமே இல்லாமல் கூட நடிப்பேன். ஆனால் சிவாவோடு நடிக்க முடியாது என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.