
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் அமரன். இந்த படம் கடந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி ஹிட் அடித்தது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் சாய் பல்லவி நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு வைத்து எடுக்கப்பட்ட படம்.
விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது. அதன் தொடர்ச்சியாக நூறு நாட்களை கடந்த சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர், உரிமையாளர்கள் ஆகியோர் அழைத்து வெற்றி விழா நடைபெற்றது. விழாவில் கமலஹாசன் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், “கமல் சார் எனக்கு ரொம்ப சரியாக சம்பளம் வந்தது. சார் ரொம்ப சீக்கிரமே சம்பளம் வந்துவிட்டது. இப்படி நடப்பதெல்லாம் அரிதான விஷயம். எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது. படம் ரிலீசுக்கு ஆறு மாதம் முன்பு சம்பளம் கொடுத்து அதையும் தாண்டி மரியாதையும் ரொம்ப முக்கியமா கொடுப்பதெல்லாம் அரிதான விஷயம்” என்று கூறியுள்ளார்.