இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினர் பொழுதுபோக்கில் சமூக ஊடகங்கள் ஆன பேஸ்புக், whatsapp மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை அதிகளவு பயன்படுத்துகின்றனர். இதன் மூலமாக இளம் வயதினருக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணையாக ஆபத்துக்கள் அதாவது தவறான நபர்களின் தொடர்பு கொள்ளும் அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு தீர்வு காணும் விதமாக கோவை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை பொதுமக்களுக்கு விடுத்துள்ளது. அதாவது சமூக ஊடகங்களில் முன் பின் தெரியாத நபர்களிடமிருந்து வரக்கூடிய அழைப்புகளுக்கு தொடர்புகளும் குறுஞ்செய்திகளுக்கும் பொதுமக்கள் பதிலளிக்க வேண்டாம் எனவும் இவ்வாறு வரும் தவறான தொடர்புகள் குறித்த புகாரை www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்யப்படும் புகார்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.