
தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு சென்றவர். தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் .அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் திருமாணிக்கம் படத்தின் வெற்றி விழாவில் ரோபோ சங்கர் சமுத்திரக்கனி குறித்து பேசி உள்ளது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதாவது, “சமுத்திரக்கனி என் உடன் பிறவாத சகோதரர். என் மகள் இந்திரஜா சமுத்திரக்கனியின் பெயரை பெரியப்பா என்று தான் போனில் ஷேவ் செய்து வைத்துள்ளார். அந்த அளவிற்கு என்னுடைய குடும்பத்தில் முக்கியமானவர். ஆனால் தற்போது வரை அவர் என் பேரனை வந்து பார்க்கவே இல்லை. விரைவில் அது நடக்கும் என்று நம்புகிறேன். நானும் சமுத்திரகனியும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை. இது தொடர்பாக பல முறை நான் அவரிடம் கூறியுள்ளேன். கண்டிப்பாக அது ஒரு நாள் நடக்கும்” என்று கூறியுள்ளார்.