பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் சப்பாத்தி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த மரணங்கள் உணவில் விஷம் கலந்ததின் விளைவாக நிகழ்ந்தது. பிரேத பரிசோதனை மூலம், அவர்கள் சாப்பிட்ட சப்பாத்தியில் விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது.

சம்பவத்துக்குப் பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவரான இளம் பெண் தனது காதலனைத் திருமணம் செய்ய அவரது பெற்றோர் மறுத்ததை தொடர்ந்து, காதலனுடன் இணைந்து தனது குடும்பத்தையே விஷம் வைத்து கொலை செய்ய திட்டமிட்டார். இளம்பெண், வீட்டில் சப்பாத்தி செய்ய பயன்படுத்திய கோதுமை மாவில் விஷம் கலந்து, அது தெரியாமல் குடும்பத்தினர் சாப்பிட்டு உயிரிழந்தனர்.

இச்சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தனது தாய், தந்தை உள்பட 13 பேரை இளம்பெண் கொன்றுள்ள சம்பவம் விசாரணையின் போது வெளிச்சத்திற்கு வந்தது. சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இளம் பெண் மற்றும் அவரது காதலன் நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.