
ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தற்போது சந்திரபாபு நாயுடுவை சந்திரமுகி என்று விமர்சித்துள்ளார். அதாவது இன்று தன்னுடைய கட்சி அலுவலகத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது, ஆந்திராவில் தற்போது மது மற்றும் மணல் மாஃபியா கும்பல் ஊழலில் ஈடுபடுகிறது. இந்த ஊழலுக்கு எதிராக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுக்க வேண்டும்.
ஜெகன்மோகன் ரெட்டி தயிர் சாதம் போடுவார் என்றும் சந்திரபாபு நாயுடு பிரியாணி போடுவார் என்றும் நம்பி ஆந்திர மக்கள் ஓட்டு போட்டனர். ஆனால் சந்திரபாபு நாயுடு தேர்தல் வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாத நிலையில் கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் நிறுத்திவிட்டார். ஆந்திராவில் முதல் மந்திரி முதல் எம்எல்ஏக்கள் வரை அனைவரும் மற்றவர்கள் உடைமைகளை தங்கள் உடமைகளாக பாவிக்கிறார்கள். ஆட்சியில் அமர்ந்த பிறகு சந்திரபாபு நாயுடு சந்திரமுகியாகவே மாறிவிட்டார். மேலும் பொதுமக்கள் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் இல்லை எனில் வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று கூறினார்.