
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் நூருல்லா ஹைதர் (55). இவரது மனைவி அஸ்மா கான் (42). கணவன் மனைவி இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த தம்பதியினருக்கு பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மகனும், எட்டாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இந்த நிலையில் ஹைதர் தனது மனைவியின் மீது அடிக்கடி சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்தார். சம்பவம் நடந்த அன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கோபமடைந்த ஹைதர் தனது மனைவியின் முகத்தை தலையணையால் மூடி அவரது தலையில் பலமுறை சுத்தியலால் ஓங்கி அடித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அஸ்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ஹைதர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஸ்மாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.