
தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஐந்து நாட்களில் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்யும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது