ஆந்திரா மாநிலத்தில் உள்ள கோதாவரி மாவட்டத்தில் துளசி என்பவர் வசித்து வருகிறார். துளசி புதிதாக வீடு கட்டுகிறார். கடந்த 19-ஆம் தேதி அவரது வீட்டிற்கு பார்சல் சர்வீஸ் பெரிய மரப்பெட்டி வந்தது. அதனைத் திறந்து பார்த்து துளசி அதிர்ச்சியடைந்தார். ஏனென்றால் அதில் அழுகிய நிலையில் சடலம் மிரட்டல் கடிதத்துடன் இருந்ததை கண்டு பதற்றம் அடைந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை நடத்திய போது சொத்து பிரச்சனை காரணமாக துளசியின் சகோதரி சுஷ்மா, அவரது கணவர் ஸ்ரீதர் ஆகியோர் பார்சலை அனுப்பி மிரட்டியது தெரியவந்தது. அவர்கள் தெருவில் குடிபோதையில் படுத்து கிடந்த தொழிலாளியின் கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்தனர்.