தனது சகோதரியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் இளைஞர் ஒருவர் காவல் நிலையத்திற்கு நடந்து சென்ற நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சகோதரியின் காதல் உறவு காரணமாக கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பதேபூர் பகுதியில் உள்ள மித்வாரா என்ற கிராமத்தில் ரியாஸ் என்ற 22 வயது இளைஞர் மற்றும் அவரின் சகோதரி ஆஸிப்பா என்ற 18 வயது இளம் பெண் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ரியாஸ் தன்னுடைய சகோதரியின் கருத்தை கூர்மையான ஆயுதத்தால் துண்டித்து விட்டு துண்டித்த தலையுடன் காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.