
சென்னை மாவட்டம் பழைய வண்ணார்பேட்டையில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். அவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சென்னை அமைந்தகரையே சேர்ந்த சகோதரிகளான சாமுண்டீஸ்வரி(45), சந்திரா(30) உட்பட 3 பேரின் அறிமுகம் சுப்ரமணியத்திற்கு கிடைத்தது. அவர்கள் மூன்று பேரும் தங்களின் பூர்வீக சொத்தை விற்க போவதாக கூறினர். இதனையடுத்து வில்லிவாக்கம் எம்.டி.எச் சாலையில் 9108 சதுர அடி நிலம் இருப்பதாகவும், அதற்கான ஆவணங்களையும் சுப்பிரமணியிடம் காட்டியுள்ளனர்.
இதனை நம்பி சுப்பிரமணியம் அந்த நிலத்தை 1.5 கோடிக்கு வாங்கினார். பின்பு விசாரித்த போது அந்த நிலம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடம் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அறிந்த சுப்பிரமணியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட சகோதரிகளான சாமுண்டீஸ்வரி, சந்திரா ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.