கோ கோ உலக கோப்பை 2025 இறுதிப்போட்டி நேற்று டெல்லி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது. இதில் இந்தியப் பெண்கள் அணி நேபாளம் அணியுடன் மோதியது.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய பெண்கள் அணி 78 – 40 என்ற புள்ளி கணக்கில் நேபாளம் அணியை வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. மேலும் இந்திய அணியின் சிறந்த வீராங்கனையாக சைத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.