
கோவையில் மீண்டும் போட்டியிட உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக கோவையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய கமல்ஹாசன், கோவையில் எனக்கு பெரும் ஆதரவு உள்ளதால் கோவையில் மீண்டும் போட்டியிட உள்ளேன் என்றார். 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டார்.