
வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்துக்கள் மீதும், இந்து கோவில்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் போராட்டங்களும் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் சுனம்கஞ்ச் மாவட்டம் தோராபஜாரில் இந்து கோவில் மற்றும் இந்துக்களின் வீடுகளை தாக்கியதாக சுல்தான் அகமது ராஜு, ஆலிம் ஹுசைன், ஷாஜகான் ஹுசைன், இம்ரான் ஹுசைன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகஸ் தாஸ் என்பவர் முகநூலில் வெளியிட்ட பதிவு தான் வன்முறையை தூண்டியதாக கூறப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.