
கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர். இவர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார். நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.
நேற்று பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு கிராம மக்கள் வாகனத்தில் மாரியம்மனுக்கு பூக்களை எடுத்து மேல தாளத்துடன் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது குளித்தலை பெரிய பாலம் பகுதியச் சேர்ந்த நாகேந்திரன் கோவில் தெருவில் நடனம் ஆடிக் கொண்டிருந்த ஷாம் சுந்தர் மீது விழுந்தனர்.
உடனே ஷாம் சுந்தர் ஓரமாக சென்று நடனம் ஆடுங்கள் என கூறியதால் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த நாகேந்திரன் ஷியாம் சுந்தரை கத்தியால் குத்தினார். தடுக்க வந்த வசந்தகுமார், அஜய் ஆகிய இருக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த 2 வாலிபர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷியாம் சுந்தரியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.