
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுயேந்திர சாஹல் கடந்த 2020 ஆம் வருடம் தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த இவர் அடுத்தடுத்து பாடகியாகவும் அறிமுகமானார். தனஸ்ரீயின் நடவடிக்கைகள் சாஹலுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்ததை அடுத்து இருவரும் விவகாரம் செய்ய போவதாக தகவல் வெளியானது. ஆனால் தனஸ்ரீ-க்கு ஆதரவாக சாஹல் பல சமயங்களில் பேசி வந்தார். ஆனால் 2023 ஆம் வருடம் சாஹலின் பெயரை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கியிருந்தார். ஆனால் விவகாரத்தை குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்தது.
இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பாக இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி விவகாரத்தை பெற்று விட்டார்கள். தனஸ்ரீ தர்மாவுக்கு 4.75 கோடியை கிரிக்கெட் வீரர் சாஹல் ஜீவனாம்சமாக வழங்க இருக்கிறார். இதில் 2.37 கோடி மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தையடுத்து தனஸ்ரீ மீது “கோல்டு டிக்கர்” என்று கடுமையாக விமர்சனங்கள் வைத்து வருகிறார்கள். இன்ஸ்டாவில் ஒருவர் இவ்வாறாக தனஸ்ரீயை விமர்சித்த பதிவை ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா லைக் செய்துள்ளார். இது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. கோல்ட் டிக்கர் என்பது பணம் அல்லது சொத்துக்காக ஒருவருடைய உறவில் இருக்கும் பெண்ணை விமர்சிக்க பயன்படுத்தும் சொல் ஆகும்.