
அமெரிக்க நாட்டின் மத்திய பகுதியில் சக்திவாய்ந்த புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. அதன்படி ஆர்கன் சாஸ், ஓக்லஹோமா, டெக்சாஸ் ஆகிய வாகனங்களை புயல் தாக்கியது. இந்த புயலில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததோடு கார்களும் சேதமடைந்தது. இந்நிலையில் கட்டிட இடிப்பாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பச்சிளம் குழந்தைகள் உட்பட 19 பேர் பரிதாபமாக இறந்தனர். அதன் பிறகு 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கோரப் புயலின் தாண்டவத்தால் அமெரிக்காவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.