
தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் கோமியம் விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, கோமியத்தை குடிப்பதும் குடிக்காமல் அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஒரு குழு கோமியத்தை குடியுங்கள் என்றும் இன்னொரு குழு கோமியத்தை குடிக்காதீர்கள் என்றும் கூறுகிறார்கள். என்னை பொருத்தவரையில் கோமியம் என்பது இந்துக்களால் புனிதமாக பார்க்கக்கூடிய புனித நீர். எனவே நீங்கள் விருப்பப்பட்டால் குடியுங்கள் இல்லையென்றால் குடிக்காதீர்கள். இதில் யாரையும் வம்பு செய்ய முடியாது. இந்த உணவை தான் சாப்பிட வேண்டும், இந்த கடவுளை தான் வணங்க வேண்டும் என்று யாரையும் நாம் வம்பு செய்ய முடியாது. எதையுமே விருப்பப்பட்டு செய்தால் இங்கு எதுவுமே தப்பு கிடையாது. நானும் விஜயகாந்த்தும் கூட கோமியத்தை வாங்கி தலையில் தெளித்துள்ளோம்.
எங்கள் வீட்டில் அனைவருமே இதை செய்துள்ள நிலையில் எங்கள் வீட்டிலும் நாங்கள் மாடுகள் வளர்க்கிறோம். எனவே கோமியத்தை குடிப்பது குடிக்காமல் இருப்பது போன்றவைகள் அவரவர் விருப்பம் என்பதால் இதில் யாரும் தலையிட முடியாது. அப்போது பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் தங்களுடைய சிறுநீரை தங்களை குடிக்கலாம் என்று கூறியுள்ளார். இது ஏற்றுக் கொள்ளக் கூடியதா.? அவரவர் சிறுநீரை அவரவரே குடிக்கலாம் என்ற கருத்து நிலவும் போது கோமியத்தை குடிக்கலாமா இல்லையா என்பதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும் ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்பதால் இதில் கருத்து சொல்ல முடியாது என்று கூறினார். மேலும் எதையுமே விரும்பி ஏற்றுக் கொண்டால் இங்கே எதுவுமே தப்பில்லை கோமியத்தை குடிப்பது மற்றும் குடிக்காமல் இருப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.