கேரள மாநிலத்தில் உள்ள சித்திரிகல்லி பகுதியில் சுரேந்திரநாத் (50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் சுரேந்திர நாத்துக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவ நாளில் கோபத்தில் வீட்டிற்கு வந்த சுரேந்திர நாத் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட் எடுத்து  மனைவி மீது ஊற்றினார்.

இதில் மனைவி தப்பிவிட்ட நிலையில் அவருடைய மகன் மீது ஆசிட் பட்டது. இதனால் உடல் முழுவதும் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து சுரேந்திரநாத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவருடைய மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுரேந்திரநாத்தை தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம்  அவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.